விஞ்ஞானிகள் உபயோகிக்கும் கதிரியக்கங்களும் அதை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல்களும்
See more posts like this on Tumblr
#அகஸ்தியன்More you might like
படிப்பறிவில்லாத அகஸ்தியன் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகள்
அகஸ்தியன் ஐந்து வயதிற்குள் பெற்ற ஆற்றல்கள்
தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு இயற்கையின் பேருண்மைகளை அறியும் சந்தர்ப்பம் பெற்றவன் தான் அகஸ்தியன். பல கோடித் தாவர இனங்களுக்குள் இருக்கும் சக்திகளைத் தன் ஐந்து வயதிற்குள்ளேயே காணும் சந்தர்ப்பம் பெறுகின்றான். கடவுளின் அவதாரம் என்றே அக்கால மக்கள் அவனைப் போற்றுகின்றார்கள். அணுவினை அறியும் ஆற்றல் பெற்றதால் அகஸ்தியன் என்று காரணப் பெயர் பெற்றான். அவன் பெற்ற ஆற்றல்களைத் தான் சந்தர்ப்பவசத்தால் வியாசகரும் வான்மீகியும் பெற்று அவர்களும் ஞானியாக ஆனார்கள்.
அகஸ்தியன் ஸ்டேசன் அலைத் தொடர்பு
அகஸ்தியன் ஸ்டேசனை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம். இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட இயற்கையின் இரகசியங்களை நீங்களும் அறியலாம். அவனுடைய நினைவுகள் உங்களுக்குள் வரும்.
அகஸ்தியன் அருளைப் பெற எப்படி முயற்சிக்க வேண்டும்
அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும். சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும். அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும். உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில் தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
உங்கள் வாக்கால் தீமைகள் போகும்
காட்டுக்குள் ஒரு கீரியும் பாம்பும் சண்டையிடுவதைக் குருநாதர் காட்டி கீரி.. பாம்பின் விஷத்தை எப்படி முறிக்கிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார். அதே சமயத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் பல கொடிய மிருகங்கள் மற்ற உயிரினங்களிடமிருந்து தப்ப பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையும் காட்டினார். அகஸ்தியன் உணர்வை நீங்கள் பெற்றால் தீமைகளை அகற்றலாம்… நஞ்சினை வெல்லலாம்…! வென்ற அந்த உணர்வை நீங்கள் சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது அது மற்றவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக மாறும். செய்து பாருங்கள்.
வேகா நிலை அடைந்தவன் அகஸ்தியன்
எத்தகைய விஷத்தின் தன்மை தாக்காது உணர்வை ஒளியாக மாற்றி அழியா நிலை பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனைப் பின்பற்றி அக்காலத்தில் விண் சென்றோர்கள் ஏராளம் ஏராளம். ஞானப் பாதையில் நாம் கடினம் என்று எண்ணலாகாது. பதிவு செய்தால் அதுவே உங்களுக்குக் குருவாக அவ்வப்பொழுது வழி காட்டும். உடலுக்குள் அணுக்களாகப் பெருக்கிடல் வேண்டும்.
மீனவனான வியாசனுக்கு அகஸ்தியன் உணர்வுகள் எப்பொழுது கிடைத்தது…?
மீனவனான வியாசன்… கடலிலே புயலில் சிக்கிய நேரத்தில் எந்த மீனை விற்று ஜீவனை வளர்த்து வந்தானோ அதே இன மீனால் காக்கப்படுகின்றான். அந்தப் பாச உணர்வு கொண்டு அக்கால வழக்கப்படி சூரியனை வணங்கப்படும் பொழுது வடகிழக்குத் திசையில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் கவரும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தான் வியாபித்திருக்கும் இயற்கையின் உண்மைகளைக் கண்டுணர்ந்தான் அந்த வியாசன்.
அகஸ்தியன் நுகர்ந்த அபூர்வ மூலிகை மணங்கள்
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில் “பச்சிலை மணங்களும்… அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும். அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறையும். உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறையும்.
ரிஷிபத்தினி விளக்கம் சூரியனில் விழும் கரும்புள்ளியினால் நமக்கு வரும் ப…
குடும்பத்தை வெறுத்துத் துறவறம் பூண்டேன் என்று சென்றால் அது முனி தான். அகஸ்தியன் தன் மனைவியுடன் இணைந்து தான் துருவ மகரிஷியாக ஆனான். விஞ்ஞானத்தின் விஷ விளைவுகளால் சூரியன் கக்கும் சில விஷத் தன்மைகள் கரும்புள்ளியாக எப்படி மாறுகிறது என்றும் அதனின் பாதிப்பு நம் உடலிலும் அது எப்படிப் படுகிறது என்று குருநாதர் காட்டினார். நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைவது தான்.
தியானத்தில் ஒரு நிலைப்படுத்துவது எப்படி…?