ரிக் வேதத்தைத் தலைகீழாகவும் பாடிக் காட்டினார் குருநாதர்
See more posts like this on Tumblr
#ஈஸ்வராய குருதேவர்More you might like
தவமிருக்கும் தபோவனம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும் அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.
தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!” அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.
ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும் மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும் அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.
இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.
உலக மக்கள் அனைவரும் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானிகளாக மாற வேண்டும். Every SOUL to be raised as POLARIS (north star). Each and every SOUL in this world should attain the IMMORTAL State. We wish everybody to share this and spread sacred service Don’t post anything in this community. This community is not meant for that.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் சரித்திரம்
தியானத்தில் ஒரு நிலைப்படுத்துவது எப்படி…?
யாம் கொடுக்கும் சக்தியைக் கையாளும் முறை
தீமைகளை நீக்கப் புருவ மத்தியில் கட்டளை இட வேண்டும்
ஊன் உடம்பு ஆலயமடா ! என்று சொன்ன திருமூலர் வழியில் அனைத்துலக மக்களையும்…
அபிராமிப்பட்டர் அன்று சொன்னது மனிதனுக்குத் “திதி” கிடையாது
வீட்டிற்குள் இருந்தே ஆற்றல்மிக்க சக்திகளை எப்படிப் பெறுவது…?
மனித வாழ்க்கையின் இரகசியம்