நல்ல குணங்களைக் காக்கும் வழியைக் காட்டியவர்கள் ஞானிகள்
See more posts like this on Tumblr
#ஞானிகள்More you might like
பயத்தை அடக்கி மன பலம் பெறுங்கள்
பதிவான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகினறது என்று தெளிவாகத் தெரிந்து கொண்டால் எத்தகைய தீமையையும் நீக்க முடியும். நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். மன பலத்துடன் ஞானிகள் சென்ற பாதையில் சீராகச் செல்ல முடியும். அதற்கே ஞானிகள் கண்ட பல பல உண்மைகளை உபதேசமாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).
கோவிலில் தேர் இழுக்கச் சொன்னது ஏன்…?
எல்லோரும் ஒருங்கிணைந்து அந்தத் தெய்வ சக்தியைப் பெறுவதற்காகத்தான் கோவிலில் தேரை இழுக்கும்படிச் செய்தார்கள் ஞானிகள். பத்தாவது நிலையான கல்கியை அடைவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.
ஆலயப் பண்புகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?
கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.
“சாதாரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும்…!” அகஸ்தியர் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி ஞானிகள் காவியங்களையும் ஆலயங்களையும் படைத்தார்கள்.
அகஸ்தியனை உயர்வாக எண்ணித் தியானித்தால் அவன் மூச்சலைகளைப் பெற முடியும்
அக்கால ஞானிகள் பெரும்பகுதி சொல் வடிவில் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தாது மௌனமாக இருந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அகஸ்தியர் அவ்வாறு வெளிப்படுத்திய அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் பெறுதல் வேண்டும்… பெற முடியும். நம் குழந்தைகளை அப்படி உருவாக்க முடியும்.
தவறு செய்வதை உணர்த்தும் மெய் வழி
அருள் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். நடக்கும் உண்மைகளை அது அவ்வப்பொது உங்களுக்குள் உணர்த்தும். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் சென்று உண்மையை உணர்த்தும்படி செய்யும்.
அருணகிரிநாதர் ஞானம் எப்படிப் பெற்றார்?
பதஞ்சலி முனிவர் திருமூலர் ஆக ஆனதன் சந்தர்ப்பம்
பாம்பாகப் போ… பேயாகப் போ… சாபத்தின் விளக்கம்
ஞானிகள். “நீ பாம்பாகப் போ…!” என்று ஒரு ரிஷி சாபம் கொடுத்தார் என்று கதையைச் சொல்வார்கள்.
ஏனென்றால் வீட்டில் வேதனைப்படுவார்கள். “என் வீட்டில் அப்படி இருக்கின்றது… இப்படி இருக்கின்றதே… அது இருக்கின்றதே… இது இருக்கின்றதே…! என்று வேதனைப்படுகின்றார்கள். இதெல்லாம் விஷத்தை வளர்த்துக் கொள்வது தான்
நம் உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று நம்மை மனிதனாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்த்து வந்தது. ஆனால் நம் ஆசையை வைத்துக் கொண்டு “அவன் அப்படிச் செய்கின்றானே… இவன் இப்படிச் செய்கின்றானே… இதைச் செய்கின்றானே…!” என்று வேதனையை அதிகமாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தன்மை எல்லாம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
அதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று சொல்லப்பட்டது. அந்த வேதனை உணர்வுகள் உடலிலே விளைந்து உயிராத்மாவில் விஷம் அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் பாம்பாகப் பிறக்கின்றது. பாம்பு விஷத்தை உமிழ்த்தி அதை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது.
உயிர் எத்தனையோ தரம் காப்பாற்றியது. இப்படி வேதனையை வளர்த்த பின் “நீ பாம்பாகப் போ…!” என்று உயிர் அந்த அளவுக்கு வளர்த்து விடுகின்றது… அந்த ரிஷி சாபமிடுகின்றான்…! என்று காட்டுகின்றார்கள்.
உயிர் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது. அதனால் உயிரை ரிஷி என்றார்கள் ஞானிகள். (நீ பாம்பாய் போ என்று உயிர் சொல்வதாகத் தெளிவாகக் காட்டுகின்றனர்) அப்பொழுது “ஐயனே என்னை அறியாத இந்தப் பிழையிலிருந்து நான் விடுபடும் உபாயத்தை நீங்கள் காட்ட வேண்டும்.” ”நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்" என்று கேட்கின்றார்.
நமக்குத் தெளிவாக்குவதற்கு இந்தக் குட்டிக் கதையைப் போடுகின்றார்கள். சரி… “நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய்… அவன் கை படும்… நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்….!
பாம்பு கடிக்க வந்தவுடனே நாம் என்ன செய்வோம்..? அடிப்போம். அப்போது அந்த மனித உடலுக்குள் பாம்பின் உயிர் போகின்றது. பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.
ஊருக்கு ஊர் மாரியம்மனையும் விநாயகரையும் ஞானிகள் வைத்ததன் நோக்கம்
தியானத்தில் ஒரு நிலைப்படுத்துவது எப்படி…?